செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை : பகுதி - III


கிமு. 850பின்
இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ்வடமொழி, (வடதமிழ்தென்தமிழ்என மொழிகள் உருவாயினவடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றனபிராமிக்கும்தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டுவடமொழி பாகதமாகவும்தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்லகாரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டனகடைச் சங்க காலத்தில் நற்றினைகுறுந்தொகைஅகநானூறுபுறநானூறுகலித்தொகைபதிற்றுப்பத்துபரிபாடல்பத்துபாட்டுஎட்டுத்தொகைபதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்திருமுருகாற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைபொருநராற்றுப்படைகூத்தராற்றுப்படைமருதக்காஞ்சிமுல்லைப்பட்டுகுறிஞ்சிப்பாட்டுபட்டினப்பாலைநெடுநல்வாடைமுதலிய நூல்கள் தோன்றினதிருக்குறள் தலையாய நூல்பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம்மணிமேகலைசீவகசிந்தாமணிவளையாபதிகுண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும்முதுமொழிக்காஞ்சிகளவழி நாற்பதுகார்நாற்பதுநாலடியார் திரிகடுகம்நான்மணிக்கடிகைசிறுபஞ்ச மூலம்ஏலாதிஆசாரக்கோவைபழமொழி நானூறுஇன்னா நாற்பதுஇனியவை நாற்பதுமுத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கிமு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடுமென்டோனாஇத்தாலிபித்திக்காந்திரோப் பஸ் யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்ததுசீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்புகெராஸிமவ்)


கிமு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கிமு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டதுஇவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கிமு. 623- 543

கெளதம புத்தர் காலம்தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கிமு. 600

லாவோ துசு காலம்துவோசிசம் சைனாவில் புழக்கம்எளிமைதன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கிமு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்றுகி.முநான்குஐந்துஆறாம்நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன்பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டதுபுணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கிமு. 599 - 527

மகாவீரர் காலம்ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கிமு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்கணிதம்இசைக் கற்றுக் கொடுத்தக் காலம்மரக்கறி உண்ணல்யோகாசனம்ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கிமு. 551-478

கன்பூசியஸ் காலம்சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்விமக்களின் வாழ்முறைமதம் யாவும்.

கிமு. 500

கரிகாற் சோழன் காலம்உலக மக்கள் தொகை 100 மில்லியன்இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கிமு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கிமு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கிமு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கிமு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம்பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கிமு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கிமு. 328 - 270

மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியரை வென்றவன் கிரேக்க யவனரை அடக்கியவன்)

கிமு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்புவெற்றி அமையவில்லை.

கிமு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம்கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கிமு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கிமு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கிமு. 300

கல்வெட்டுகளில் சோழபான்டியசத்தியபுத்திரசேர அரசுகள் இருந்தனகி.முஇரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ்பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கினபிராகிருதம் மக்களின் மொழிநாணயங்களின் ஒரு பக்கம் தமிழ்மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம்தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்ததுகலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்ததுஇவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன்சோழன் பெரும்பூண் சென்னிபாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன்ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சிஉறையூர்ச் சோழன் தித்தன்ஆட்டணத்திஆதிமந்திஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சிபாரிஒரிகாரிகிள்ளிநள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சிசேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சிஇக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சிசேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிகானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள்இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார்மோசிக்கீரனார்பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன்கரும்பனூர்கிழன்நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிபாண்டியன் பழையன் மாறன்கோப்பெருஞ்சோழன்பிசிராந்தையார்பொத்தியார்புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைபாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிகோவூர் கிழார்தாமப்பல் கண்ணனார்ஐயூர் முடவனார்ஆவூர் முழங்கிழார்ஆலத்தூர் கிழார்மற்றோக்கத்து நப்பசலையார்இடைக்காடனார்ஆடுதுறை மாசத்தனார்வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

1 கருத்து: